பல்கலை மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு!


அஷ்ரப் ஏ சமட் -

ஹாஷிம் உமர் பௌண்டேசன்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் வேலைத்திட்டத்தின் 21 ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (16-05-2026) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் செய்திப் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் சுதர்மன் ரதலியகொட,விசேட அதிதியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் செய்தி பிரிவின் பிரதான பொறுப்பாளர் சி.பி.எம்.சியாம், எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா,சிலோன் ஹபீபீ ஸ்தாபகர் ஹபீபீ, சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜவ்பர்,தயாரிப்பாளர் எம்.எச்.எப். ரின்ஸா, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம்,அர்ஹம் சுலைமான் மற்றும் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபகர்
புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நயோமி அமரசிங்க-வெலிப்பென்ன, எம்.ஆர்.எப்.ரிஸ்கா-பாணந்துறை, எம்.இஸட்.ஹாஜரா ,தர்ஹா டவுன் மற்றும் எம்.ரி.எப்.ரஷீதா --
அனுராதபுரம் ஆகியோர் புரவலர் இடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :