பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் பல்கலைக்கழக விண்ணப்பம் நிரப்பும் முகாம்


மாளிகைக்காடு செய்தியாளர்-

சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு, அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மற்றும் சொப்டா கெயார் நிறுவனங்களின் அனுசரனையுடன் இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் செயன்முறை தொடர்பான வழிகாட்டலும், “பல்கலைக்கழக விண்ணப்பம் நிரப்பும் முகாமும்” நிகழ்வு 2026.05.13 அன்று காலை 9.00 மாலை 7.00 வரை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தினர்.

இந் நிகழ்வில் பிரதம வளவாளராக சபீர் ஹமீட் அவர்கள் கலந்து கொண்டு , பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பித்தல் மற்றும் கற்கை நெறி தெரிவு தொடர்பான வழிகாட்டலை வழங்கினார்.

மேலும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான நூருல் ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டு பல்கலைக்கழக நடைமுறை, எதிர்கால கல்வி மேம்பாடு, பட்டதாரிகளின் சமூக கடமைகள் தொடர்பில் விஷேட உரையாற்றினர்.

மேலும் இந் நிகழ்வில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூருல் ஹுதா உமர், சொப்டா கெயார் நிறுவன பணிப்பாளர் பொறியியலாளர் எம். நஸீர், ஆகியோர்களை சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பினர் கௌரவித்ததோடு , மிக நீண்ட கால சமூக கல்வி பணியை மேற்கொண்டு வரும் ஏ.எச். சபீர் ஆசான் அவர்களும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

சுமார் 200 இற்கும் மேற்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் பல சமூக , கல்வி , நல செயற்திட்டங்களை மேற்கொள்ள சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பானது தொடர்ச்சியாக பயணித்து வருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :