42வது தேசிய மிலாதுன் நபி விழா தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நீர்கொழும்பில்


நூருல் ஹுதா உமர், அக்ரம் லுதூபி-

திர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ள 42வது தேசிய மிலாதுன் நபி விழாவை முன்னிட்டு ஆரம்பகட்ட ஏற்பாட்டு கலந்துரையாடல் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

பிரதி அமைச்சர் மு்னீர் முலஃபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விழாவை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, பிரதேச மக்களுக்கு விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல், பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல், விழா நடைபெறவுள்ள நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தின் வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், நிகழ்ச்சி நிரல் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் மு்னீர் முலஃபர் அவர்கள் விழா நடைபெறவுள்ள நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரிக்கு நேரில் விஜயம் செய்து மைதானம் மற்றும் அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார்.

இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச சமய தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :