காலஞ்சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் “கலாபூஷணம்” ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (11) காலை 09.00 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மெஸ்ரோ (MESRO) ஸ்ரீலங்கா அமைப்பின் நிறுவுனருமான சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் இந்நாழ்வு இடம்பெறவுள்ள இந்நினைவேந்தல் நிகழ்வில் அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நாழ்வில், மர்ஹூம் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் நீண்டகாலமாக ஊடகத்துறையில் அளப்பரிய பங்காற்றிய நினைவுப் பகிர்வும்,
விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment