கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு!




அஷ்ரப் ஏ சமத்-

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளை மாபெரும் நிகழ்வாக நடாத்துவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் இடமிருந்து கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் பணம் அறவிட முடியாது
சுற்றறிக்கை இல 54 - 2023 (on Financial management along with other relevant financial Regulation ) கல்வி அமைச்சின் செயலாளரிடம் இருந்து 09.04.2026 தேதியிட்ட கடிதம் சகல அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பாடசாலை நிகழ்வுகள் மிகவும் எளிமையாக பாரிய செலவுகள் இன்றி நடைபெற வேண்டும் என இந்த நாட்டில் உள்ள சகல அதிபர்களுக்கு முகவரியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆனால் நேற்று முன்தினம் 08.04.2026 - கொழும்பில் உள்ள அரச பாடசாலையில் தேசிய பாடசாலையான 
- இசிபத்தன கல்லூரியின் அதிபர் முன்னிலையில் இசிபத்தன கல்லூரி ரக்பி விளையாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு கொழும்பில் உள்ள பிரபல 14 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் 80 மில்லியன் ரூபாவுக்கு அனுசரனை டிஸ்ப்ளே களை அதிபரிடம் வழங்கி வைத்தார்கள்.

அந்த ரக்பி போட்டி 18 பாடசாலைகள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வுக்கு . இந் நிகழ்வு அனுசரனையாளர்கள், ஊடகவியாளர்கள், ரக்பி மாணவர்கள் அதிபர் பழைய மாணவர் பிரநிதிகள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு கொழும்பு 3 ல் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இக் -ஏற்பாடு பழைய மாணவர்கள் அமைப்பு

இந்நிகழ்வுக்கு ஊடகவியாளர்கள் ஊடக பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர் நானும் ஊடக ஆவரணைக்கு அங்கு சென்றிருந்தேன்.

இவ்வாறு நிதி சேகரிப்பில் இந்த நிதி சுற்றறிக்கைக்கு உட்பட்டதா ?


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :