சிங்கப்பூரில் உயரிய “ஜமாலியன் விருது” பெற்றார் 'புதிய நிலா' மு. ஜஹாங்கீர்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சிங்கப்பூரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டூழிய, சமூக நலப்பணியாற்றி வரும் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சங்கத்தின் தலைவர், 'புதிய நிலா' மு. ஜஹாங்கீர் அவர்களின் சேவைகளைப் பாராட்டி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினரால் (சிங்கப்பூர் கிளை) உயரிய “ஜமாலியன் விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

கல்விமான்கள், புத்திஜீவிகள் என பல்துறை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த உயரிய ஜமாலியன் விருதானது இவ்வாண்டு புதிய நிலா மு. ஜஹாங்கீர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, இவ்விருதை வழங்கிக் கௌரவித்தார்.

அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப் பலதரப்பட்டோரும் உயரிய “ஜமாலியன் விருது” பெற்ற 'புதிய நிலா' மு. ஜஹாங்கீர், மேலும் மேலும் பல சேவைகள் புரிந்து, சமூக நலப் பணியாற்றி, நீடூழி காலம் வாழ வேண்டுமென வாழ்த்தி, தமது பாராட்டுக்களையும் தெரிவித்து வரும் அதேவேளை, இலங்கை மக்கள் சார்பிலும் பலரும் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :