கல்முனையில் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும்


எம்.என்.எம்.அப்ராஸ்-
 
ல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சமுர்த்தி அபிமானி' வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும் இன்று (09) கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி. டீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம் பழீல் ஆகியோரும் ஏனைய அதிதிகளாக சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எம்.அம்சார்,கருத்திட்ட முகாமையாளர் எஸ்.எல் அஸீஸ்,சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான ஐ.எல்.எஸ்.ஹிதாயா,எஸ்.எஸ் பரீரா,எம்.ஏ.எம் பைசால்,சிறுகைத்தொழில் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல்.ஏ. ஜலீல் மற்றும் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் தலைவர் ஏ.எச்.ஏ. நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டதுடன்,சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,
பிராஜா சக்தி பிரிவு தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :