நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கும் நோக்கில், அகில இலங்கை கம்பன் கழகத்தின் சார்பில் அதன் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் வழங்கிய நிதி நன்கொடை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கடந்த (15) ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
இந்நிதியைத் தொடர்ந்து, (16) ஆம் திகதி மாலை பழைய எல்பிட்டிய கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சகல சமுகத்தினருக்கும் நிவாரண உதவியாக அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பணிகள் இன, மத பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றும் வகையில் உதவிகள் வழங்கப்பட்டன.
அகில இலங்கை கம்பன் கழகத்தின் இந்த முயற்சி சமூக ஒற்றுமையையும், அனர்த்த நேரங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
.jpg)
0 comments :
Post a Comment