பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசின் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது! கல்எலிய கிராமத்தலைவர் சந்திரன் தெரிவித்தார்.



வி.ரி.சகாதேவராஜா-
ண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எமது பொலனறுவை கல்எலிய கிராம மக்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் முதற்கட்ட 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி என்று கல்எலிய கிராம மக்கள் தலைவர் கே. சந்திரன் தெரிவித்தார் .
அண்மையில் ஒஸ்கார் அமைப்பினர் நிவாரண பணி மேற்கொண்டிருந்தபொழுது அவர் மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ..
நாம் முன்னர் கதுறுவல புகையிரத நிலையத்தில் அருகில் வாழ்ந்து வந்தோம்.
பின்பு அப்போதைய அரசின் தேவைக்கு ஏற்ப நாங்கள் 2000 ஆண்டில் இங்கு இடம் மாற்றப்பட்டோம்.
கடந்த பேரிடரில் எமது கிராமத்தில் உள்ள 168 குடும்பங்கள் 15 அடி வெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டோம்.
இங்கு 140 தமிழ் குடும்பங்கள் 21 சிங்கள குடும்பங்கள் 08 முஸ்லிம் குடும்பங்கள்
அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அண்மையில்
சுமார் 15 அடி வெள்ளம் அளவில் வந்தது. பாதிக்கப்பட்டோம். அருகில் உள்ள ஒரு உயர்ந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் தஞ்சம் அடைந்து ஐந்து நாட்கள் பின்பு வீடு வந்தோம்.
அனைத்தும் சேதம் அடைந்திருந்தன.
இப்பொழுது படிப்படியாக மீண்டு வருகிறோம்.எமது பிள்ளையார் ஆலயமும் சேதமடைந்திருக்கின்றது. என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :