சுனாமி பேரழிவின் 21 ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்!



2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் 21 ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மையோன் சமூக சேவை அமைப்பு, மையோன் குரூப் மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையுடன் இணைந்து, மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது.

இந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 27.12.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை, சாய்ந்தமருது ஜனாஸா தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

உயிர்காக்கும் இந்த உன்னத பணியில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்ததானம் செய்வதன் மூலம் நோயாளிகள், விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் பலரின் உயிர்களை காக்க முடியும்.

இதனை முன்னிட்டு, “ஓர் உயிரை வாழவைத்தவர் எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போல் ஆவார் (ஹதீஸ்)”
என்ற நபிவாக்கியத்தையும் நினைவுகூர்ந்து, தகுதியுடைய அனைவரும் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு தங்களது இரத்தத்தை தானம் செய்து மனிதாபிமான சேவையில் பங்குகொள்ளுமாறு அமைப்பாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

இரத்ததானம் வழங்க விரும்புவோர் முன்பதிவிற்காக கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்:

· அஸ்வர் – 077 480 4316
· நஸீர் – 077 696 8676
· ஜெமீன் – 077 900 0771


இந்த சமூகநல சேவை முயற்சிக்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :