அரசாங்கத்தின் "ரன்பிம வீடமைப்பு வேலைத்திட்டம் - 2025" கீழ் வீடற்ற சமூர்த்திப் பயனாளிகளை முதற் கட்டமாகத் தெரிவு செய்து, அவர்களுக்கான புதிய வீட்டினை 01 மில்லியன் ரூபாய் செலவில், அம்பாறை மாவட்டத்தில் ஒவ்வோரு பிரதேச செயலகப்பிரிவிலும் 03 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (15) சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த கிராம சேவகர் பிரிவிற்கான பிராஜாசக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் சாய்ந்தமருது பிரதேச செயற்பட்டாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







0 comments :
Post a Comment