பொது இடங்களை அழகுபடுத்தும் பணியை முன்னெடுத்துவரும் நிலாவெளி ஜனாஸா சங்கம்!



அபு அலா-
கோபாலபுரம் - நிலாவெளி ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டினால், கோபாலபுரம் மையவாடியை சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம்  (17) முன்னெடுக்கப்பட்டது.

ஜனாஸா சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான என்.எம்.இல்ஹாம்
தலைமையில் இடம்பெற்ற இந்த சிரமதானம் பணியில்
கோபாலபுரம் முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் இளைஞர் அமைப்புகள், சமூகசேவை அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.

கோபாலபுரம் - மையவாடி இருள் நிறைந்த நிலைமையில் பல வருடங்களாக காணப்படுவதுடன், நீர் வசதி மற்றும் சுற்றுமதிலற்ற நிலைமையில் காணப்படுவதாகவும் இக்குறைபாட்டை மிக விரைவில் செய்து முடிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருவதாக ஜனாஸா சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான என்.எம்.இல்ஹாம் தெரிவித்தார்.
பொதுமக்களினால் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற, அரச மற்றும் அரச சார்பற்ற இடங்கள், பஸ்தரிப்பு நிலையம் போன்ற இடங்களை துப்பரவு செய்து வருவதுடன், அதனை பொதுமக்கள் பாவிக்கும் வகையில் திருத்தியமைக்கும் பணியினை குறித்த அமைப்பின் தலைவர் என்.எம்.இல்ஹாமினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :