இனங்களுக்கிடேயான ஒற்றுமைக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக பொங்கல் நிகழ்வு அடித்தளமாக அமையும். உபவேந்தர் மஜீத்.



நாட்டில் சிதைந்து போயுள்ள இனங்களுக்கு இடையேயான ஐக்கியத்தை சீர்செய்யும் நோக்குடன்; தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய நிகழ்வுகளுடனான பொங்கல் நிகழ்வும், குறித்த நிகழ்வை முஸ்லிம் மாணவர்கள் முன்னின்று நடாத்தியதும்; இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையை மேம்படுத்த சிறந்த அடித்தளமாக அமையும் என நம்புவதாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.மஜீத் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய நிகழ்வுகளுடனான தைப்பொங்கல் நிகழ்வு 2025.02.05 ஆம் திகதி கலை கலாச்சார பீட முற்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பதில் உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி யூ.எல்.மஜீத், இன முரண்பாடுகளுக்கும் நீண்ட கால யுத்தத்துக்கும் அதனூடாக ஆயிரம், ஆயிரம் உயிரிழப்புக்கள், பொருளாதார நெருக்கடி போன்றவற்றுக்கு இன ஒற்றுமை சிதைந்து போனதே காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மட்டத்தில் இன ஒற்றுமைக்கான அத்திவாரமிடப்படுவது சிறந்த உதாரணம் என தெரிவித்த உபவேந்தர், இன ஒற்றுமையை பறைசாற்றும் நிகழ்வுகள் அவ்வப்போது இடம்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இனம் மதங்களைத் தாண்டி பொது ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிடார்.

அவர் தனது உரையில், இனங்கள் தண்டி எல்லோரும் மனிதர்கள், என்ற அடிப்படையில் எல்லா சமூகங்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து; தங்களது பயணங்களை மேற்கொள்ளும் கலை கராச்சார பீட மாணவர்கள், இனங்களின் ஐக்கியத்துக்காக பல்வேறு முன்னெடுப்புக்களை எடுத்து வருவதாகவும் அதன் ஒருகட்டமாகவே இன்றைய பொங்கல் நிகழ்வு இடம்பெறுவதாகவும் அதிலும் விஷேடமாக இந்துக்கள் மிகக்கௌரவமாக கொண்டாடும் பொங்கல் நிகழ்வை முஸ்லிம் மாணவர்களும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தது, தென்கிழக்கு பல்கலைக்கழக க மாணவர்களின் ஒற்றுமைக்கான முன்மாதிரியாக அமையும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி பேராசிரியர்கள், சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரி.எம். அஷ்ஹர், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். அகமட் முனாஸ், செயலாளர் எம்.எம்.எம். காமில் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





































 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :