சம்பந்தன் ஐயாவின் மரணச் செய்தி கேட்டு மிகவும் ஆழ்ந்த கவலை அடைகிறேன் - ஹிஸ்புழ்ழாஹ்.காலம் சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் ஐயாவின் மரணச் செய்தி கேட்டு மிகவும் ஆழ்ந்த கவலை அடைகிறேன் என முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சம்பந்தன் ஐயா 1989ஆம் ஆண்டு தொடக்கம் என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த ஒருவர் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு மட்டத்தில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தந்தவர்.
அத்துடன் மூதூரில் விடுதலை புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய போது அது தொடர்பில் இரண்டு மூன்று நாட்கள் அவரோடு தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.
அவர் மிகவும் நீதியாகவும், நியாயமாக நடந்து கொள்கின்ற ஒருவர், நான் கிழக்கு மாகாணத்தில் அமைச்சராக, ஆளுநராக இருந்த காலப்பகுதியில் என்னுடைய முன்னெடுப்புகளுக்கு முழு ஆதரவையும் வழங்கிய ஒருவர்.
நான் எப்பொழுதும் மரியாதையோடும் கண்ணியமாகவும் பார்க்கின்ற ஒரு தலைவர்.
தமிழ் சமூகத்தின் வடகிழக்கு பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம் சமூகத்தினுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் மும்முரமாக இருந்த ஒருவர்.
தான் வயது முதிர்ந்த காலத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் துணிச்சலாகவும் 13வது சட்ட திருத்த விடயத்தில் மிகவும் காரமாக நடந்து கொண்ட மிகப்பெரிய ஒரு தலைவர்.
என்றும் சிறுபான்மை சமூகத்திற்காக இப்பொழுதும் குரல் கொடுக்கும் ஒரு பெரும் தலைமைத்துவத்தை நாம் இன்று இழந்து இருக்கிறோம். அவருடைய இழப்பால் கட்சிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :