குறைந்த வருமானம் பெறும் குடும்பபங்களுக்கு ஆதரவு வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் முழு நாட்டையும் உள்ளடக்கும் விதமாக குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ கிராம் நாட்டு அரிசியை இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.முசாரப் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் உதவி பிரதேச செயலாளர் செ.பாத்தீபன் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஐகுலேந்திரன் மற்றும் சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம் .எம் அச்சுமுகமட் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

0 comments :
Post a Comment