ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்.



நூருல் ஹுதா உமர்-
ரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :