தகுதியானவர் இல்லை என்றால் கண்டிப்பாக அந்த வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன ரணதுங்கØ இத்தருணத்தில் தற்போதைய ஜனாதிபதியை விட ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான ஒருவர் தனது கட்சியில் இருந்தால் அதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்குவதே பொருத்தமானது...

Ø தகுதியானவர் இல்லை என்றால் கண்டிப்பாக அந்த வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Ø இத்தருணத்தில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு எதிர்காலத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும்...

Ø ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டுக்கான அரசியல் மாற்றத்தை உருவாக்கினார்…

Ø ராஜபக்சர்கள் திருடியதாக கூறும் ஜே.வி.பி, 88/89 இல் செய்ததை மறந்துவிட்டது...

Ø துருப்பிடித்த அரசியல் செய்வதை விடுத்து நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்குமாறு அனுரகுமாரவிடம் கேட்டுக் கொள்கிறேன்…

ற்போதைய ஜனாதிபதியை விட ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான ஒருவர் தமது கட்சியில் இருந்தால் அவருக்கு வழங்குவதே பொருத்தமானது எனவும் தகுதியானவர் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

இத்தருணத்தில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்திக்கக்கூடிய எதிர்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் கூறினார். அதற்கான அதிக தகுதிகள் தற்போதைய ஜனாதிபதியிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கனேஹிமுல்ல பிரதேச சபைக் கூட்டத்தில் நேற்று (4) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றியோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் பற்றியோ அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் பேசமாட்டார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இப்படிப்பட்ட தற்பெருமைக்காரர்களிடம் இருந்து ஒரு நாட்டின் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டுக்கான அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி பேசினார். அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து நாட்டுக்காக உழைக்கச் சொல்லி அரசியலைத் தொடங்கினார். பொருளாதார சீர்திருத்தங்களில் நாட்டுக்கு நல்லது செய்வதே தவிர, மக்கள் கேட்பதை அல்ல என்றார். நாங்கள் எடுத்த முடிவுகள் மக்கள் முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செய்தது, நாட்டு மக்களுக்கு இந்த அமைப்பைப் பழக்கப்படுத்தியதுதான். விலை அதிகரிக்கும் போது அதிகரிக்கவும், குறையும் போது குறையவும் விலை சூத்திரம் வழங்கப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது.

அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கங்களில் இல்லாதது போன்று இன்று பேசுகின்றார். திருமதி சந்திரிகா குமாரதுங்க வந்தபோது விகாரமஹாதேவி என்று கூறி அழைத்து வந்தவர். அவரை வெற்றியடைய வைத்து நான்கு அமைச்சர் பதவிகளையும் பெற்றார். அந்தத் தேர்தலில் ரெஜி அவர்கள் தோல்வியடைந்தார். அவர்கள் அரசாங்கத்தின் அங்கம் ஆனார்கள்.

மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்ட போது தெற்கிலிருந்து துட்டுகெமுனுவாகவே அழைத்து வரப்பட்டார். மஹிந்த சிந்தனையே நாட்டுக்கு சிறந்தது என தமது தலைவர்கள் கூறுவதை பார்க்கின்றனர். எம்முடன் இணைந்த பின்னர் சரத் பொன்சேகாவுடன் இணைந்தார். அங்கிருந்து ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு சென்றார். அதன் பின்னர் அனுரகுமாரவின் செயலாளர் ஊழல் குழுவின் தலைவராக செயற்பட்டார். அனுரகுமார அவரை இயக்கினார். அவரும் அந்த அரசாங்கத்தில் இருந்தார். நாங்கள் 225 பேரும் இருக்கவில்லை, ஆட்சி செய்யவில்லை என்று அவர்களால் கூற முடியாது. இன்று ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். 88/89 இல் என்ன நடந்தது என்று 2000க்குப் பின் வந்த தலைமுறைக்குத் தெரியாது.

அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தத்தை மதிக்கவில்லை என்றால், அல்லது துண்டுப் பிரசுரம் மூலமாக கடையை மூடவில்லை என்றால், அந்த மனிதனை சுட்டுக் கொன்று விடுகிறார்கள். இரவில் வீடுகளுக்குச் சென்று மக்களைக் கொன்றனர். எமது கட்சிகள் ஒருபோதும் அரச சொத்துக்களை கொன்று, எரித்து, அழித்ததில்லை. அந்தக் குற்றங்களையெல்லாம் செய்த குழு ஜனதா விமுக்தி பெரமுன. இன்று அவர்களால் அந்தப் பாவத்திலிருந்து தப்ப முடியாது. அதனால்தான் அந்த வரலாறு தெரிந்தவர்கள் எப்போதும் ஜே.வி.பி.யை 3% என்று போடுகிறார்கள். நேற்று முன்தினம் மாபெரும் மகளிர் மாநாடு நடந்தது. சுமார் 300 பெண்கள் சைக்கிளில் சென்றனர். இந்தக் கூட்டத்திற்கு முன்பு அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நான் போய் அந்த கிராமத்தில் எத்தனை குடும்பங்கள் உள்ளன என்று கேட்டேன். வாக்காளர் பட்டியலில் 170 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஊர் ஆண்களுக்கு இரண்டு இரண்டு மனைவிகளா என்று கேட்டேன்.

ராஜபக்சர்கள் திருடியதாக கூறும் ஜனதா விமுக்தி பெரமுன அவர்கள் செய்ததை மறந்து விட்டது. 88/89 இல் சொத்துக்களுக்கு தீ வைத்தனர். அதன் காரணமாக இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஜனதா விமுக்தி பெரமுனவும் காரணம். பொருளாதாரப் பிரச்சினை கோட்டாபயவின் காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல. 30 வருட யுத்தம் நடந்தது. போர்தான் அதற்குச் சிறந்த வழி. 2005 இல் மஹிந்த வெற்றி பெற்று 2009 இல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். அன்று சஜித் பிரேமதாசவின் தந்தை புலிகளுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கினார். 600க்கும் மேற்பட்ட நமது காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களால் கொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படியொரு வரலாறு நமக்கு இருந்தது. உலக நாடுகள் எமக்கு ஆதரவளித்த போது, யுத்தம் செய்ய எம்மை ஆதரிக்கவில்லை. நமது நாட்டின் வருமானம் போருக்கே செலவிடப்பட்டது. போர், இயற்கை சீற்றங்கள், 83 கறுப்பு ஜூலை போன்ற காரணங்களால் நமது பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.

88/89 இல் செய்ததை மே 9ம் திகதி ஜனதா விமுக்தி பெரமுன செய்தது. பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கம்பஹாவில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர். மினுவாங்கொடை தொகுதியில் 13 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எங்களை மக்களிடம் இருந்து விலக்கி வைப்பதற்காகவே அத்தனையும் செய்தார்கள். அடிபட்டு நாம் கூர்மைப்படுத்தப்படுகிறோம் என்பது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :