நாபீர் பவுண்டேஷனின் சமூக செயற்பாடுகள் மற்றும் அரசியல் போக்கினை தெளிவாக புரிந்து கொண்டு நாளுக்கு நாள் அதிகளவான பொதுமக்கள் நாபீர் பவுண்டேஷன் தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் கல்முனைக்குடி 12 ம் வட்டாரம் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் வேட்பாளர் U.L.A.றஹ்மான் அவர்கள் நாபீர் பௌண்டேஷனின் கொள்கையையும் சமூகபணியையும் ஏற்று
உதுமான் கண்டு நாபீர் அவர்களின் இணைப்புச் செயலாளர் பாயிஸ் கரீம் அவர்களின் முன்னிலையில் இணைந்து கொண்டார்.
பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதுடன் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபிர் அவர்களுக்கு தங்களது முழுமையான ஆதரவினை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் U.L.A.றஹ்மான் அவர்கள் இணைப்புச் செயலாளர் பாயிஸ் கரீம் அவர்களிடம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment