97 அமைப்பின் ரீ சேட் அறிமுகமும் கற்பித்த ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும்எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை அந்நூரியன்ஸ் 97 அமைப்பின் ரீ சேட் அறிமுகமும் கற்பித்த ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும் பாசிக்குடா லயா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (22/07/2022) இரவு இடம் பெற்றது.

அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அஹமட் ஹாதி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அந் நூர் தேசிய பாடசாலையின் முதல்வர் ஏ.எம்.எம்.தாஹிர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக அந் நூரியன்ஸ் 97 அமைப்பிற்கு கற்பித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

ரீ சேட் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளுக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டதுடன் பாடசாலை நூற்றாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் அமைப்பு ரீதியாக பங்குபற்றி வெற்றி பெற்றமைக்காக அதில் பங்குபற்றியவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.

அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அஹமட் ஹாதி அமைப்பை சிறப்பாக நெறிப்படுத்தி வருவதற்காக நண்பர்களால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

97 அந் நூரியன்ஸ் அமைப்பில் மரணித்தவர்களுக்காகவும் கற்பித்த ஆசிரியர்களில் மரணித்தவர்களுக்காகவும் விஷேட துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் அந் நூரியன்ஸ் 97 அமைப்பின் உறுப்பினர்களது பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

நிகழ்வின் நிகழ்ச்சி தொகுப்பினை அறிவிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றுமைஸ் நடாத்தினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :