முஹம்மது ஜாபிர் அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையில் விசேட தரத்திற்கு பதவி உயர்வு



சர்ஜுன் லாபீர்-
சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட ஜனாப். அ.ற. முஹம்மது ஜாபிர் அவர்கள் ( காலம்சென்ற ஏ.ஏ. றஸ்ஸாக் மெளலவி அவர்களின் மூத்த புதல்வர்) அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் விசேட தரத்திற்கு ( Special Grade) 2019.07.01 ஆம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

1999 இல் அரச கரும மொழித் திணைக்களத்தின் பட்டதாரி மொழிபெயர்ப்பாளராக (தமிழ் /ஆங்கிலம்) பதவியேற்று 2001 ஆம் ஆண்டு வரை கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றினார்.

இன விவகார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிலும்,
கனிப்பொருள், மூலவள அபிவிருத்தி அமைச்சிலும் நீதி , சட்ட மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவிலும் நிவாரணம், புனர்வாழ்வு நல்லிணக்க அமைச்சிலும் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

பொது நிருவாக உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் தரம் - 1 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து 2005 ஆம் ஆண்டிலிருந்து
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மிக நீண்ட காலமாக அரசாங்க மொழிபெயர்ப்பாளராக ( தமிழ் / ஆங்கிலம்) தரம் - 1 இல் கடமையாற்றியுமுள்ளார்.

அத்துடன், இவர் நீதி அமைச்சின் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் (தமிழ் / ஆங்கிலம்) ( Sworn Translator) என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் தற்பொழுது கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :