அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திற்கான தேர்வுப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஒக்டோபர் முதல் பாடங்கள் ஆரம்பம்அஷ்ரப் ஏ சமத்-
பாகிஸ்தான் உயர்கல்வி ஆணையம், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திற்கான தேர்வுப் பரீட்சையினை மே மாதம் 29ம் திகதி முதல் ஜூன் 4 வரை இலங்கையில் நடத்தியது. புத்தளம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாடளாவிய ரீதியில் இருந்து மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டனர். பல்வேறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். மேலும், தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உயர் கல்வி ஆணையத்தின் தலைவரினால் வழங்கப்படும். பாடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்து, கல்வி நடவடிக்கைகள் இவ்வருட ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும். கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :