சாதனை மாணவி ஸூஹ்றா நதாவை மஹ்மூத் சமூகத்தினால் கெளரவிப்பு.மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் நடத்தப்பட்ட 2023ம் ஆண்டிற்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் தொழில்நுட்ப சிறார்கள் பிரிவில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தரம் 09ம் பிரிவு மாணவி ஸூஹ்றா நதா (13) தேசிய ரீதியில் வெற்றி பெற்ற 05 சாதனையாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை, 16.06.2023ம் திகதி
கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளுக்குமான புத்தாக்க சிந்தனைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஸூஹ்றா நதாவினால் முன்மொழியப்பட்ட சிறுவர்களுக்கான எஸ்.டி.ஜி கற்றல் தொடர்பான மொபைல் பயன்பாட்டு மென்பொருள் செயலிக்காக இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.
ஸூஹ்றா நதாவின் திறமையினை பாராட்டும் வகையிலும் கல்லூரி மாணவிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் நேற்றைய தினம் (19) கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்ற காலை ஆராதனை ௯ட்டத்தில் ஸூஹ்றா நதா பெற்றுக்கொண்ட வெற்றிக்கிண்ணம், நினைவு சட்டகம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதி அதிபர் (நிருவாகம்) ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை அவர்களினால் பூ மாலை அணிவிக்கப்பட்டது டன் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, தரம் 09 பகுதித்தலைவி
எஸ்.எம். முபீனா ஜமான், பெற்றோர்கள் ஆகியோர் புடை சூழ கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். அமீன் அவர்களின் பொற்கரங்களால் வெற்றிக்கிண்ணம், நினைவு சட்டகம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸூஹ்றா நதாவின் பெற்றோர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. அஸ்லம் சஜா மற்றும் அஸ்ரப் ஹஸ்னா செர்பின் ஆகியோரின் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
- ஊடக பிரிவு -
கல்முனை மஹ்மூத் மகளிர்,
(தேசிய பாடசாலை),
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :