மாவடியில் பெருந்திரளான பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்தினர்.வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வான எண்ணெய்க்காப்பு சாத்தும்கிரியை நிகழ்வுகள் நேற்று (26) திங்கட்கிழமை ஆரம்பமாகியது.

காலையில் இருந்தே பெருந்திரளான பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்துவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர்.

கடந்த(24) சனிக்கிழமை விசேட கர்மாரம்ப கிரியைகளுடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமானது.

இன்று (26) திங்கட்கிழமையும் , நாளை (27) செவ்வாய்க்கிழமையும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

நாளை மறுதினம் புதன் கிழமை (28) காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை செயலாளர் சின்னத்தம்பி சிவகுமார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :