காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற 33 வது தியாகிகள் தினம்!



காரைதீவு நிருபர் சகா-
ழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 வது தியாகிகள் தினம் நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

நேற்று காலை 10.30 மணியளவில் அம்பாறை மாவட்ட ஈபிஆர்எல்எவ் அமைப்பாளர் எஸ். புண்ணியநாதன்( கரன் ஏற்பாட்டில் சர்மா தோழரின் தலைமையில் நடைபெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து சிறப்பித்தார்.
மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்து உயிர் நீத்தவர்களின் உறவுகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஜுன் 19 ஆம் தேதி தமிழகத்தில் தோழர் பத்மநாபாவும் 13 தோழர்களும் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருகிறார்கள் .
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மறைந்த தலைவர் தோழர் பத்மநாபாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை சூட்டி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

33 வது தியாகிகள் தினத்திலும் உயிர் நீத்த தோழர்களின் உறவுகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட அமைப்பாளர் எஸ். புண்ணியநாதன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :