தேசிய மட்ட பொதுநலவாய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி ஜே.ஜுமைனா ஹானி தேசிய ரீதியில் 2 ஆம் இடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.
பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாத் பேச்சுப் போட்டியில் தேசியத்தில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தேசிய ரீதியாக சாதனைகளை நிலைநாட்டி வரும் மாணவி ஜுமைனா ஹானிக்கும் கட்டுரைப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுக்கொள்ள பயிற்றுவித்த ஆசிரியர்களான எம்.இந்துராணி, ஏ.எம்.றிஹானா, ஜே.எம்.நியாஸ் ஆகியோர்களுக்கு அதிபர் என்.சஹாப்தீன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சாதனை படைத்த இவ் மாணவி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கடமையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.கே.ஜௌபரின் புதல்வியாவார்.

0 comments :
Post a Comment