மீனாட்சி அம்மன் ஆலயத்தில் யானைகள் அட்டகாசம்! பாரிய சேதம்!



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று(31) நள்ளிரவில் புகுந்த ஐந்து யானைகள் அங்கு பாரிய சேதத்தை விளைவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 5 யானைகள் ஆலய சுற்றுமதிலை உடைத்துக் கொண்டு அங்கிருந்த அலுவலக அறை களஞ்சியசாலை என்பவற்றை முற்றாக உடைத்து சேதப்படுத்தின.

களஞ்சிய சாலையில் உள்ளிருந்த அரிசியை எடுத்து உறிஞ்சியது. நான்கு பக்கங்களிலும் தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்தின.

அருகில் இருந்த பாரிய மாமரத்தின் கிளையை முறித்து எறிந்து சுமார் ஒரு மணி நேரம் அட்டகாசம் செய்தன.

அச்சமயம் அங்கிருந்த காவலாளி எதுவும் செய்ய முடியாத நிலையில் அச்சத்தில் இருந்துள்ளதாக ஆலய தலைவர் கி.ஜெயசிறில் கூறினார் .

இது தொடர்பாக போலீசிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகக்கூறினார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :