சுகாதாரத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கல்முனையில் விசேட கலந்துரையாடல்.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்களுக்கான கலந்துரையாடல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது தற்போது நாட்டில் இருந்து அதிகமான சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் வெளிநாடு செல்வது கல்முனை பிராந்தியத்தையும் பாதித்துள்ளது. அதே போன்று சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாட்டு உள்நாட்டு வேலை வாய்ப்புகளுக்காக மருத்துவத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் விடுமுறை பெறுவதனாலேயே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகிறது என்பது தொடர்பிலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந் நிலைமையை சமாளிப்பதற்கும் நோயாளிகளை வேறு மாகாணங்களுக்கு சிகிச்சைகளுக்காக அனுப்புவதில் உள்ள சவால்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள தரமற்ற உணவு விநியோகம், வைத்திய ஆலோசனை இன்றி தனியார் மருந்தகங்களினால் மருந்துகள் விநியோகம், ஆக்சிஜன் சிலிண்டர்களை அண்மையில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து பெறுதல், இரத்த மற்றும் ஏனைய மாதிரிகளை தபால் மூலமாக அனுப்பி வைப்பதன் மூலம் செலவுகளை பாரியளவில் குறைத்தல் தொடர்பிலும் மீன்களுக்கு அசுத்தமான மண்ணை கலத்தல் மற்றும் உணவகங்களின் தரம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :