இலங்கை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தினம் சாய்ந்தமது அல்-ஹிலால் பாடசாலையில் இன்று (04) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சுதந்திர தினத்தையொட்டி பாடசாலையில் ஆரம்ப கல்வி மாணவர்களின் சித்திரக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக் கண்காட்சி கூடத்தின் நாடாவை வெட்டி வைத்தும் தேசியக்கொடியையும் ஏற்றியும் வைத்தார்.
இதன் போது மாணவர்களால் தேசிய வீரர்கள் பற்றி உரையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதி அதிபர் நுஸ்ரத் பேகம், உதவி அதிபர் ஐனூல் மர்சுனா உட்பட பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment