இனவாத அரசியல் மூலம் ராஜபக்ஸக்கள் நாட்டை முற்றாக சீரழித்தமையே இன்றைய நிலைக்கு காரணம் - முத்தலிப் நெளஷாத்



நூருல் ஹுதா உமர்-
திசயத்தக்க பெரும் வளங்களைக் கொண்ட எமது நாட்டை அதாள பாதாளத்திற்கு கொண்டு சென்ற பெரும் கைங்காரியத்தை செய்தவர்கள் ராஜபக்ஸ குடும்பத்தினர்கள் என தெரிவித்தார் உதவும் சிறகுகள் அமைப்பின் தலைவர் முத்தலிப் நெளஷாத் என உதவும் சிறகுகளின் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான முத்தலிப் நௌசாத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிராந்தியத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சிறகுகள் அமைப்பினூடாக இன்று (09) உலர் உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ராஜபக்ச அரசாங்கம் ஒரு பக்கம் நாட்டின் வளங்களை சுரண்டுவதும் மறுபக்கம் இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவதுமான செயற்பாட்டிலே ஆட்சி செய்து வந்தனர்.

ஆண்டாண்டு காலமாக நமக்கு உதவிக்கரம் நீட்டி வந்த நாடுகளையும் பகைத்து விட்டு தனது குடும்பத்திற்கு கொமிசன்களை வழங்கும் நாடுகளோடு உறவுகளைப் பேணி வந்ததன் விளைவாகவே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமாகும். இனவாதத்தின் மூலம் கட்டிய சாம்ராஜ்யம் அதே மக்களால் தன் கண்முன்னே தகர்த்தெறியப்பட்ட வரலாற்று நிகழ்வு எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியை சொல்லியுள்ளது

ஜனநாயக வழிமுறைகளைக் கடந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற வந்தவர் எனும் பழிச்சொல்லில் இருந்து விடுபட வேண்டும். சட்டம் குற்றவாளிகள் மீது பாய வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீளப் பெற வேண்டும்.இவற்றையெல்லாம் செய்யும் போதுதான் இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அதை விட்டு விட்டு ஜனநாயக வழியில் போராடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முற்படுவதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதும் நாட்டை இன்னும் பயங்கர யுகத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். எனவே நாட்டின் நலன் சார்ந்து முடிவுகள் எட்டப்பட வேண்டும்.அதன் மூலமே நாடு சுபிட்சம் பெறும் என மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :