"ஜோஷுவா" என்ற பெயரில் தனுஷ்க அவுஸ்திரேலியாவில் செய்தது என்ன?



J.F.காமிலா பேகம்-
லங்கையின் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு வீரர் தனுஷ்க்க அவுஸ்திரேலிய வெள்ளை இன பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் செய்தி சம்பந்தமாக அந்நாட்டு செய்தி ஊடகம் ஒன்று பூரண விபரங்களை வெளியிட்டுள்ளது .

அந்த அறிக்கையில் பின்வருமாரு கூறப்பட்டுள்ளது.

குணதிலக்க அந்தப்பெண்ணுடன் மது அருந்தியுள்ளார். அதன் பின்னரே அவர் பலமுறை அசாதாரண முறையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அந்தப்பெண்ணின் விருப்பமின்றியே, மூச்சு திணரரும் வரை அவரின் உடம்பை இறுக்கி ,ஆணுறை பாவிக்காது , பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடைசியில் அப்பெண்ணுக்கு உயிர்ப்பயம் ஏற்பட்டதன் காரணமாக, அவரது மூளை சம்பந்தமாக ஸ்கேன் செய்வது அவசியம் என வைத்திய ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக, நீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிரபலமான டின்டர் (Tinder dating app ) டேட்டிங் செயலி மூலமாக குணதிலக்க அந்த பெண்ணுடன் நற்பை தொடர்ந்துள்ளார்.ஒக்டோபர் 29 திகதி முதல் 4 தினங்களாக. தொடர்பில் இருந்ததுடன் இன்ஸ்டாகிராம், வட்சப் செயலிகள் மூலமும் , வீடியோ தொலைபேசி மூலமும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்.

31 வயதான தனுஷ்கவும் 29 வயதான மெக்கி சிட்னி நகர பெண்ணுக்கு, நவம்பர் 2ம் திகதி சிட்னியிலுள்ள ஒபேரா பாரில் தனியாக சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.சசெக்ஸ் வீதியிலுள்ள ஹயட் ரீஜன்ஸி ஹோட்டலில் தங்கியிருந்த தனுஷ்க்க குணதிலக்க இரவு 8.20 மணியளவில் சந்திக்க சென்றார். அந்த பெண் பாரில் அரை மணித்தியாலம் வரை இருந்து விட்டு பின்னர் Frankies pizza வுக்கு சென்று 10.20 மணியளவில் இருவரும் வீட்டுக்கு சென்றுள்ளனர்.வீட்டுக்கு செல்வதற்க்கு தண்ணீர் படகுச்சேவையை எதிர்பார்த்து காத்திருந்த வேளையிலும் , பலாத்காரமாக அப்பெண்ணை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்ததாகவும், படகில் பயணிக்கும் போதும், அவரது பிட்டத்தில் தாக்கியதாகவும் அதற்கு அந்தப்பெண் "ஓய்" என பதிலிருத்ததாகவும் பொலிசார் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் வீட்டுக்கு சென்ற பின்னர் சுமார் 20,30 நிமிடங்கள் அப்பெண்ணின் கழுத்தில் ஒரு கையை வைத்து இறுக்கி அழுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது."என்னால் எதுவும் செய்ய முடியாது பயந்து விட்டேன்.
"அவன் இன்னும் 2 முறை அவ்வாறே கழுத்தை இறுக்கினான்" என அப்பெண் கூறியுள்ளார்.

3 வது தடவை அப்பெபெண்ணின் கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத்திணரிய வேளையில், முடிந்தளவு மணிக்கட்டை பிடித்து தள்ளி விட பல முறை முயன்றதாகவும் அச்சசந்தர்ப்பத்தில், தனுஷ்க்க கோபமுற்று இன்னும் 10 நிமிடங்கள் வரை அப்பெண்ணின் கழுத்தை நன்றாக அழுத்திப்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டாளர் உயிரைப்பபற்றி பயந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து தப்ப முடியாது போகும் என்று, நினைத்ததாகவும் பொலிஸ் அறிக்கையில் சொல்லப்படுகிறது.

கழுத்தை நசித்து பிடித்திருந்ததால் தான் மிகவும் பலவீமுற்றதாகவும், அவ்வேளையில் சுமார் 10,15 நிமிடங்கள் வரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குற்பட்டதாகவும் அவ்வறிக்கையில் சொல்லப்படுகிறது.பின்னர் தனுஷ்க்க கட்டிலில் அமர்ந்திருந்த வேளையில் ஆணுறை ஒன்று விழுந்து கிடந்ததை கண்டுள்ளார்.அவ்வாறு பலாத்காரத்துக்குற்பட்டது அப்பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனை என்று தெரிந்தவுடன் அதிர்ச்சிக்குள்ளானதாகவும் , இருப்பினும் குற்றசாட்டப்பட்டவருக்கு எதுவும் கூற முடியாதளவுக்கு கடும் பயமாக இருந்ததாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குற்றச்சாட்டில் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காம் குற்றச்சாட்டுகள் மிகவும் அருவருக்கத்தக்கது.அப்பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் வாய் வழியாக மூர்க்கத்தனமாக, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது. நீதிமன்ற அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'The second charge relates to the alleged aggressive Digital penetration of the woman's vagina, while the third and forth charges are allegations that Gunathilakahad put his penis in her mouth'
பொலிசாரால் இப்பெண் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் இருந்த வேளையில் தனுஷ்க்க வாடகை டெக்ஸியை வரவழைத்து அவ்வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
அடுத்த நாள் குறித்த பெண் நடந்த சம்பவம் பற்றி நண்பர்கள் இருவருக்கு அறிவித்து ஆலோசனை சேவைக்கு கதைத்த பின் பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார்.
இலங்கை அணி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேர தயாரான வேளையிலேயே சசெக்ஸ் வீதியிலுள்ள "ஹயட் ரீஜன்ஸி" ஹோட்டலில் அதிகாலையில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டார். அனுமதியில்லாமல் பாலியல் பலாத்காரம் செய்தது உற்பட 4 குற்றச்சாசாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மூடப்பட்ட வழக்கு விசாரணைகளில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
குணதிக்காவுக்காக திங்கட்கிழமை வழக்கு ஆஜரான சட்டத்தரணி ஆனந்த அமரநாத் வழக்கை விட்டு வெளியேறி உள்ளார். இலங்கை கிரிக்கட் சபை மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தன்னை இடைநிறுத்தியதாக கூறியுள்ளார்.பின்னரான வழக்கு விசாரணைகளுக்கு டிபென்ஸ் பெரிஸ்டர் ஸேம் பரராஜசிங்கம் மற்றும் சொலிசிட்டர் ஸாரா ப்ளேக் ஆஜராக உள்ளார்கள் .
Josua "ஜோஷுவா" என்ற பெயரிலேயே அப்பெண்ணுடன் தனுஷ்க்க நற்பை தொடர்ந்திருந்தார்.முறைப்பாட்டின் பின் தொலைபேசி தொடர்புகளை புலனாய்வு செய்து, டெக்ஸி டிரைவரை தொடர்பு கொண்டதால் தான், சந்தேக நபர் இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க்க என புலன் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு இணக்கம் தெரிவிக்காமையால் 25,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வன்புணர்வு வழக்கு இன்றைய தினம் (9) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் , இது தொடர்பான வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :