க.பொ.த (உ/த) பரீட்சையில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை ) மீண்டும் ஒரு சாதனை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ம்முறை வெளியான க.பொ.த (உ/த) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்/மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் பொறியல் தொழிநுட்ப பிரிவில் SIM.ஹம்சாத் எனும் மாணவன் 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தை பெற்றுள்ளார். உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவில் MNF மில்பரா 2A B சித்தியோடு மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தையும்,JAP. சாரனா 2A B சித்தியோடு மாவட்ட மட்டத்தில் 05ம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் A.ஹம்சத் சஹி எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 5ம் இடத்தைப் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளார்.

பாடசாலை பெறுபேற்றின் அடிப்படையின் மருத்துவத்துறைக்கு 04 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 03 மாணவர்களும், பொறியியல் தொழிநுட்ப பிரிவில் 06 மாணவர்களும், உயிர் முறைமை தொழிநுட்ப பிரிவில் 07 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர், அத்துடன் கலைத்துறையில் 03 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதோடு, வர்த்தக துறைக்கு 01 மாணவரும் பல்கலைக் கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.

இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 57 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதோடு, 131 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப தகையைப் பெற்றுள்ளனர். இது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 70% அடைவாகும்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த பாடசாலை முதல்வர் அல்ஹாஜ் MA, ஹலீம் இஸ்ஹாக் (SLPS - 1) அவர்களுக்கும் அனைத்து பிரிவுகளின் பகுதித் தலைவர்கள் கற்பித்த ஆசிரியகள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) - க. பொ. த (உ/த) - 2021(2022) பரீட்சை பெறுபேறுகள்



உயிரியல் விஞ்ஞான பிரிவு
1. A. ஹஸ்மத் சஹி 3A (5)
2. MIM. சம்ஹான் 2A B (24)
3. MANF.நிப்றா 2A B (27)
4.MM.மசூத் 2A B(49)
5.AS.ஷீனத் பஸ்ரின் 2A B(63)
6.MFA.சரம் லைக் 2A B(71)
7.AF. சப்னா A 2B(72)

பௌதீக விஞ்ஞான பிரிவு
1. ALM. ரிஸ்வான் 3A (17)
2. RM. ரினோஸ் 3A (19)
3. NM. நசாதுல் ஹக் A 2B (44)

வர்த்தக பிரிவு
1. MF. ஆதீப் அஹமட் 3A (73)


கலை பிரிவு
1. CSM. ரிப்னாஸ் ABC (211)
2. ALM. அஸ்கான் ABC (282)
3. M. அஸ்பாக் அஹமத் 2A C (307)


பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
1. SIM. ஹம்சாத் 3A (01)
2. MN. அனீக் அஹமட் ABC (21)
3. RM. யாசீர் 2B C (27)
4. MK. பதி (33)
5. MRM. ஆசீக் B 2C (45)
6. MM. ஆசாத் 2B S (50)
7. ARM. அர்சாத் B 2C (59)

உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவு
1. MNF. மில்பரா 2A B (04)
2. JAP. சாரனா 2A B (05)
3. W. பெளமிதா நகார் B 2C (31)
4. JF. பாய்கா B 2C (34)
5. MAF. ரிஸ்மத் சரா 3C (50)
6. JF. அஸ்ரின் 3C (60)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :