பதவி விலகினார் கோட்டா – வெளியாகியது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!



னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 38வது பிரிவின்படி, ஜனாதிபதி தனது கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவதன் மூலம் பதவி விலக முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :