யானையின் தாக்குதலில் உயிரிழந்த 6 மாத குழந்தைபாறுக் ஷிஹான்-
யானை ஒன்றின் தாக்குதலில் 6 மாத குழந்தை ஒன்று புதன்கிழமை (08) மாலை உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தையே இவ்வாறு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளக்காடு பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை தங்கியிருந்து செய்துவருவது வழக்கம்.இந்நிலையில் சம்பவதினமான மாலை 5 மணியளவில் அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் குழந்தையை படுக்க வைத்து விட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அப்பகுதிக்கு திடீரென வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியதுடன் காயமடைந்த குழந்தை அங்கிருந்து மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குழந்தை யானை தாக்குதலினால் ஏற்கனவே இறந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :