இரவில் தூர்நாற்றம்; விலங்கறுமனையில் தூர்நாற்றம் வீசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. களத்தில் Dr.அர்சத் காரியப்பர்!!!


மாலை வேளைகளில் தூர்நாற்றம் வீசும் இடங்களென சந்தேகித்த இடங்களை இரவில் களவிஜயம் செய்து கண்டுபிடித்தார் அர்சத் காரியப்பர் : மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த தயார் என்கிறார்.
நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது பிரதேசத்தின் ஒரு பகுதியில் கடந்த சில வாரங்கள் முதல் பிந்திய மாலை பொழுதுகளில் பலத்த இனந்தெரியாத தூர்நாற்ற வாசமென்று வெளிவந்துகொண்டிருப்பதனால் மக்கள் உச்சகட்ட அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இதனடிப்படியில் சுகாதார துறையினருக்கும், சாய்ந்தமருது பொலிஸாருக்கும் கிடைத்த மக்களின் முறைப்பாட்டையடுத்து பகல் வேளைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு மக்களினால் குற்றம் சாட்டப்பட்ட விலங்கறுமனை உட்பட அதன் சுற்றாடல் பகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

கல்முனை மாநகர சுகாதார பிரிவினர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், சாய்ந்தமருது பொலிஸார், ஊடகவியலாளர்கள், கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையினர் உட்பட பலரும் திடீரென மேற்கொண்ட களவிஜயத்தில் விலங்கறுமனையில் தூர்நாற்றம் வீசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டதுடன் தூர்நாற்றத்திற்கான சரியான காரணம் அடையாளங்காண முடியாமல் இருந்தது. இன்று மாலை வழமைபோன்று திடீரென எழுந்த தூர்நாற்றத்தினால் மக்கள் மத்தியில் பலத்த சங்கடம் நிலவியது. அதனடிப்படையில் உண்மைக்காரணத்தை கண்டறிய மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் என்று கூட கவனத்தில் கொள்ளாது கள விஜயம் செய்த கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பர் மிகநீண்டநேரமாக விலங்கறுமனை உட்பட அதன் சுற்றாடல் பகுதியை கடுமையான சோதனைக்கு உட்படுத்தியிருந்தும் அங்கிருந்து தூர்நாற்றம் வருவதற்கான எவ்வித காரணிகளையும் கண்டறிய முடியவில்லை.

கல்முனையை நோக்கி செல்லும் வண்ட் வீதியில் மேற்கொண்ட பரிசோதனையில் விலங்கு கழிவுகள், கோழி கழிவுகள் உட்பட பல்வேறு திண்மக்கழிவுகள் இடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்ததுடன் குறித்த தூர்நாற்றம் தொடர்பில் பிரதேசவாசிகளுடன் உரையாடிய கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பர் அடைக்கப்பட்டுள்ள நீர்நிலையில் நான்கு மாடுகள் இறந்துள்ளதாக பிரதேச வாசிகள் மூலமாக அறிந்து கொண்டதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த தானும் கல்முனை மாநகர சுகாதார பிரிவும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மாநகர வளப்பற்றாக்குறை காரணமாக இந்த செயற்பாடு எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்பது தொடர்பில் தமக்கு தெரியாது என்றும் கள விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு அர்ஸத் காரியப்பர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :