உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம்



சர்ஜுன் லாபீர்-
மது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எதிர் வருகின்ற காலங்களில் நாடும் நாமும் எதிர்கொள்ளவிருக்கும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் இன்று(23) திங்கட்கிழமை கல்முனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு இஸ்லாமாபாத் கிராமத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சேனைக்குடியிருப்பு விவசாய போதனசிரியர் டீ.செந்தூரன், தொழில்நுட்ப உதவியாளர் எல்.தீபாலினி
பெரியநீலாவனை தொழில்நுட்ப உதவியாளர் திருமதி ஹேமஜோதி நிலோசன்
கல்முனை விவசாய போதனாசிரியர் திருமதி எஸ்.கிரித்தீகா,சமூர்த்தி முகாமையாளர்களான எஸ்.பரீரா,ஏ.எம்.எஸ் நயீமா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வீட்டு தோட்ட பயிர் செய்கை பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பயிர் மர கன்றுகள், விதை பக்கற்றுக்கள் மற்றும் மரவெள்ளி கிழங்கு கம்புகள் என பயனாளிகளுக்கு இன்று இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :