நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது. சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்வத்தை சது/மல்லிகைத்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எண்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.காந்தீபன் அதிதியாக கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எஸ் ஜெதீஸ்வரா, பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்
0 comments :
Post a Comment