அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் எண்ணக்கருவின் அடிப்படையில், அக்கரைப்பற்று பலாஹ் மற்றும் நகர் வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபையின் ஹல்லாஜ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான கிழக்கின் கேடயம் பிரதான செயற்பாட்டாளர் எஸ்.எம்.சபீஸ், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.நுஹ்மான், அக்கரைப்பற்று நகர்ப்பள்ளி வட்டாரக் குழுத் தலைவர் எம்.ஐ.எம். ஜுனைதீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment