இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் எட்டு மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் இம்முறை பரீட்சைக்கு 62 மாணவிகள் தோற்றினர் அதில், எட்டு மாணவிகள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேலும் 57 மாணவிகள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
இதில், என்.எப்.நப்லா 161, என்.எப்.நபா 157, எஸ்.மின்ஹா மனால் 154, எம்.எஸ்.எப்.சுஹாலி 153, என்.எப்.நிதா 150, ஏ.எல்.எம்.ஜெஸா 149, ஏ.ரீ.என்.அப்ஸா 148, எம்.என்.எம்.சமா 148 ஆகிய மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.
சித்தியடைந்த மாணவிகளுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment