உலக உப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரியில் சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம் பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பரின் வழிகாட்டலில் இடம்பெற்ற மேற்படி
நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஐ.எம்.எஸ்.இர்ஸாத் ,கல்லூரி அதிபர் யு..எல்.எம்.அமீன் ஆசிரிய ஆசிரியைகள் உயர்தர வகுப்பு மாணவிகள் ஆகியோர் கலந்து ஆலோசனைகளைப் பெற்றனர்.
மேலும் இவ்வாரத்தை சிறப்பிக்கும் முகமாக key tag ஒன்றும் வெளியிடப்பட்டு கலந்து கொண்டோருக்கு இலவசமாகவழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment