மனித உரிமையை மட்டுமல்ல மனிதத்தையே மீறிச் செயற்பட்டு பொய்கூறி இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முனையும் கல்விச்சமூகம் தங்களை ஒரு சுய விசாரணைக்குட்படுத்தி கொள்ள வேண்டும்.
பொட்டும் பூவும் எப்படி ஓர் இனத்தின் அடையாளமோ முக்காடும் ஓர் இனத்தின் அடையாளம். இன்னொரு இனத்தின் அடையாளத்தை மறுக்க முனையக் கூடாது.
வட கிழக்கில் வலுப்பெற்று வரும் தமிழ் முஸ்லிம் உறவு இத்தகைய கீழ் மனநிலைகொண்டவர்களின் செயற்பாடுகளால் பலவீனப்பட்டு விடக்கூடாது. ஒரு மொழி பேசும் தமிழ் முஸ்லிம் உறவுகள் தமக்கான உரிமைகளை தாமே பரஸ்பரம் மறுத்துக்கொள்வதன் மூலம் பேரினத்தின் நசுக்குதலுக்கு மிக விரைவாக தாம் உட்பட்டுவிடுவோம் என்பதை மறக்கக் கூடாது.
இன்று முக்காடை கழற்ற நீங்கள் முயற்சித்தால் அது முட்டாள் தனம்
என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பாத்திமா பஹ்மிதா நாங்கள் உங்களது பக்கமே உள்ளோம்.
In solidiarity with Fathima. Fahmidha
நியாயம் வெல்லட்டும்!
எம்.ஜ.எம்.நவாஸ்
மனித உரிமை ஆர்வலர்
0 comments :
Post a Comment