சண்முகா இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை அபாயா விவகாரம்! சம்மாந்துறையில் வெடித்தது எதிர்ப்பு!!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிந்து வரவேண்டாம், ஆசிரியைக்குரிய ஆடையை அணிந்து வரவும் எனக்கூறிய பாடசாலை சமூகத்தினை கண்டித்து சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஆசிரியர்கள் நேற்று (03) பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நாட்டிலே மூன்று பெரும் சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மை சமூகம் எந்தனையோ தேசிய பாடசாலைகள் என்று இந்த நாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது. இந்த பாடசாலையிலேஅனைத்து சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களும் அவர்களுடைய சமய கலாச்சார அடையாளங்களோடு மிகவும்சுதந்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற போது; கிழக்கிலங்கைலேயே இரண்டு முக்கிய சமூகங்களான தமிழ் முஸ்லிம் சமூகம் இன்று ஒற்றுமையாக வாழ வேண்டிய தருனத்திலே ஆடை என்ற ஒரு
பிரச்சினையை ஆரம்பித்து இன முரண்பாட்டை தேற்றுவித்து மாணவர்களை களத்திலே இறக்கி மாணவர்கள்மனதிலே இனவாத நஞ்சை ஊட்டி இன நல்லுறவை சீரழிக்கின்ற சண்முகா அதிபருக்கும் சண்முகாபாடசாலை சமூகத்திற்கும் எதிராக  ஜனாதிபதி கோட்டாபாய ரஜபக்ச அவர்களும்  பிரதமர்மஜிந்த ராஜபக்ச அவர்களும் கல்வி அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது எங்கள்அனைவருடைய எதிர்பார்ப்பாகும் .

பாடசாலை என்பது சமூகத்தின் சொத்து அல்ல இது அரச சொத்து என்றவகையிலே அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் எங்கும் தங்களது சமூக அடயாளங்களைபிரதிபலிக்கும் வகையிலே இலங்கையிலே இந்த ஜனநாயக அரசியல் யாப்பு இருக்கின்ற சூழலிலே இவ்வாறான செயன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறேம் என இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

மேலும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் "பாடசாலைகளில் ஜன நாயகத்தை நிலை நாட்டு","இன நல்லுறவைபேணு""சண்முகா அதிபரை இடமாற்று" எனும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் "மத சுதந்திரத்தைபாதுகாக்க நடவடிக்கை எடு", "நீதிமன்ற தீர்ப்பை அவமதித்மைக்கு தண்டணை வழங்கு","இன நல்லுறவை சீர்குலைக்க இடமளியாதே சண்முகா!" அரச பாடசாலையில் இனவாதத்தை தூண்டியஅதிபரை இடம் மாற்றம் செய்" என பாதாதைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :