ஹனுமுல்ல திவுலப்பிட்டியில் கைப்பணிப் பொருள் பயிற்சி மத்திய நிலையத்தை அபிவருத்தி செய்து மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு!



தேசிய கிராமிய கைத்தொழிலைக் கட்டியெழுப்பும் நோக்கில் 25 இலட்ச ரூபா செலவில் ஹனுமுல்ல, திவுலப்பிட்டியில் கைப்பணிப் பொருள் பயிற்சி மத்திய நிலையத்தை அபிவருத்தி செய்து மக்கள் பாவனைக்கு ஒப்படைத்தலும் ஹனுமுல்ல கிராமத்தின் கைப்பொருள் கலைஞர்களுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் வைபவம் பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்; மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் ஆலோசனைக்கேற்ப பாரம்பரியம் மற்றும் கிராமிய கைத்தொழில் கிராம அபிவிருத்தி இணைந்த செயற்திட்டத்தின் பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் தலையீட்டின் மூலம் பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஒன்றிணைந்து இந்த செயல்திட்டத்தை நாடு பூராகவும் செயற்படுத்தப்படவுள்ளது.

இங்கு மின்சார சுழல் மேசை, வேலை கொட்டகைகள், விளக்கு அச்சுகள், தரை அடுப்புகள் போன்ற உபகரணங்கள் மற்றும் கைப்பணிப் பொருள் கலைஞர்களுக்கு தேசிய அருங்கலைகள் பேரவையினால் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்களான நெலுக் மல்லவ மற்றும் காமல் குறுப்பு, திவுலப்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த ஆரியரத்ன, தேசிய அருங்கலைகள் பேரவை தலைவர் சம்பத் அரஹேபொல மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :