திருகோணமலையில் யானை ஒன்று 13 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் நேற்று உயிரை விட்டது



இக்ராம் அப்துல் ரசாக்-
திருகோணமலை மொரவெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் அண்ணளவாக 40 வயதுடைய யானை ஒன்று கடந்த 06.02.2021 அன்று குழியில் விழுந்த அப்பாவி யானை, நேற்று 20.02.2021 மலை 06.32 க்கு தனது உயிரை விட்டது

13 நாட்களாக மீன் வளர்ப்புக்காக வெட்டப்பட்ட தனியார் காணியில் அமைந்துள்ள சுமார் 3 அடி ஆழ குழியில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

யானையின் பின் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இனம் காண முடியாத வகையில் ஏதோ ஒரு பாதிப்பு யானைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, குறித்த பகுதி மக்களின் உரையாடல் களிலிருந்து அறியக்கூடியதாக இருந்தது.

வனவிலங்கு திணைக்களத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற போதிலும், போதிய சிகிச்சையின்றி யானை, நேற்று 20.02.2021 மலை 06.32 க்கு தனது உயிரை விட்டது

யானையை வெளியில் எடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டாலும், முதுகெலும்பில் முறிவு ஏற்பட்ட ஒரு யானையை கிரேன் மூலம் தூக்கவோ லாரியில் ஏற்றி பின்னவெல போன்ற நெடுந்தூர பிரயாணத்திற்கு கொண்டு செல்வதே சாத்தியம் இல்லை. எனவே விரும்பியோ விரும்பாமலோ சில சோகமான முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் அந்த வாயில்லா ஜீவனை காப்பாற்ற அயராத முயற்சி எடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். தக்கன பிழைக்கும் எனும் டார்வினின் கொள்கையை நினைத்து ஆறுதல் அடைந்து இறைவனை பிரார்த்திப்போம், என சில சமூக ஆர்வலர்கள் கருத்து வெளிட்டுள்ளனர்.

மேலும், யானை இறந்து சுமார் 12 மணி நேரங்கள் கடந்தும் இது வரை யானையை அகற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் , யானையில் இருந்து அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்து உள்ளதாகவும், “காப்பாற்ற தான் முடியவில்லை, அடக்கம் செய்யவும் தாமதமா?” என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :