கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது ஜமாஹிரியா வீதியில் வடிகானுக்கு மேலாக போடப்பட்ட மூடிகள் உடைந்து போக்குவரத்திற்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்து காணப்படும் இந்த மூடிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவிக்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.
இவ்வீதியை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். வடிகான் மூடி உடைந்து காணப்படுவதால் இரவு வேளையில் பலர் கானில் விழுந்து உபாதைக்குள்ளாகியுள்ளனர்.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டம் என பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment