சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா..!



யூ.கே.காலித்தீன்-
சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கலாபீடத்தின் பிரதி தவிசாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஐ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற மேற்படி . நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேஸிலங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷேய்க் என்.ஹசன் சியாத் (நளிமி) கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.
கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஐம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம்.சலீம், தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் முன்னாள் தவிசாளர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம்.காசிம், சாய்ந்தமருது முகையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் ஆகியோர் கலந்து கொண்டதோடு பிரித்தானியாவிலிருந்து சூம் தொழிநுட்பத்தினூடாக நிகழ்நிலை உரை நிகழ்த்திய தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் தவிசாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான அஷ்ஷேய்க் என்.எம். அப்துல் முஜிப் (நளிமி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் குறுகிய காலத்தில் முழுக்குர்ஆனையும் மனனம் செய்து 15 தௌராக்களை முழுமையாக பூரணப்படுத்திய அல்ஹாபில்களான முஹம்மது வசீர் முஹம்மது அஹ்சன் மற்றும் ஜலாலுத்தீன் அப்துல்லாஹ் செய்யினி ஆகியோருக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு அல் குர்ஆன் மனன பாடங்கள் விருது, பாடசாலை மட்ட பரிட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களுக்கான விருது, சிறந்த வரவை பெற்றவர்களுக்கான விருது, மாணவத் தலைவர்களுக்கான விருது, முன்மாதிரி மாணவர் விருது என பல்துறையிலும் திறமையை வெளிக்காட்டிய 43 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் பதக்கங்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வில் உலமாக்கள், சாய்ந்தமருது முகையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர், பொருளாளர், தஃவா இஸ்லாமிய்யா கலா பீடத்தின் ஆளுனர் சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :