இலங்கையின் முதல் முஸ்லிம் அரசறிவியல் பேராசிரியர் எம்.எம்.பாஸில் பாராட்டி கௌரவிப்பு.



பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கையின் முதல் முஸ்லிம் அரசறிவியல் பேராசிரியராகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை.காலாசார பீடத்தின் பீடாதிபதியாகவும் பதவி உயர்வு பெற்ற போராசிரியர்,கலாநிதி எம்.எம்.பாஸில் அவர்களை பாராட்டி கௌரவித்த நிகழ்வு 'மருதமுனை சீனிமுகம்மது சமூக சேவை அமைப்பின்';ஸ்தாபகர் எஸ்.எம்.அபூபக்கர் நஜீமின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(13-02-2022)மருதமுனை 'ஒக்காசியா கெஸ்ட் கவுசில்' மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மருதமுனை கடற்கரை நன்பர்கள் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்களும், கடற்கரை நன்பர்கள் வட்டத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இங்கு பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸிலுக்கு அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.எம்.அபூ10பக்கர் நஜீம், பொன்னாடை போர்த்தினார்,அமைப்பின் தவிசாளர் எஸ்.எம்.ஹபீழா நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி பரிசுப்பொதி வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேராசிரியரின் தாயார் திருமதி உம்மு சல்மா மன்சூர்,மனைவி திருமதி பஸ்மியா பாஸில்,அமைப்பின் தவிசாளர் எஸ்.எம்.ஹபீழா,ஆசிரியை முயினா அமீர்,மாணவன் சப்கஸ் அமீர் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.இங்கு ஓய்வு பெற்ற காதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில்,அதிபர் எம்.எம்.முகம்மது நியாஸ் ஆகியோர் வாழ்;த்துரை வழங்கினார்கள். ஏ.ஆர்.எம்.சித்தீக்.கவிஞர் எம்.எம்.விஜிலி ஆகியோர் பாடல்களைப் பாடி சபையோரை மகிழ்வித்தனர்.ஆசிரியர் விஜி எம் மூஸா நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :