ஏறாவூர் நகர சபையில் இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்காப்பு ஏறாவூர் நகர சபையில் தவிசாளர் எம்.எஸ்.நழீம் தலைமையில் நாட்டின் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதி தவிசாளர் எம்.எல். ரெபுபாசம், உறுப்பினர்களான யு. சுலைஹா, ஏ.எப் பஜீஹா ஏறாவூர் நகர சபையின் செயலாளர் சியாஹூல் ஹக், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் நாட்டில் தற்போது 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற இவ்வேளையில் எல்லா மதத்தினரும்,எல்லா சாதியினரும், எல்லா இனத்தினரும், எல்லா மொழியினரும், சமமாக மதிக்கப்பட்டு, எல்லோருக்கும் சம உரிமை, சம நீதி கிடைக்கச்செய்ய வேண்டும் என்று, நம் "அரசியல் சாசன சட்டம்" சொல்கிறது.

மனிதர்களுக்கு மதங்களுக்கிடையிலான மதப்பற்று இருக்கவேண்டுமே தவிர மத வெறி இருக்கக்கூடாது என்றும் மேலும் மனிதர்களுக்கிடையில் மனோநிலை சமமாக பேணப்பட வேண்டும். நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் Covid 19 நோயானது இவ்உலகை விட்டு முழுமையாக நீங்கி மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைகக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்கிறேன். அத்தோடு நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் கூறி உரையை முடித்துக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :