சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஆவணங்களும், 40ஆயிரம் ரூபாய் பணமும் உரிமையாளருடன் ஒப்படைப்பு



எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது 40ஆயிரம் ரூபாய் பணமும், தேசிய அடையாள அட்டை, சராதி அனுமதிப்பத்திரம், வங்கி அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் மனிபேஸ் கண்டடுக்கப்பட்டு உரிமையாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களான எஸ்.கமலதாசன் (சாரதி), வீ.கண்ணன், கே.ரஞ்சித் குமார் ஆகியோர்கள் ரீ.சீ.லேன், ஈஸா வீதிகளில் (2022.02.18) இன்று காலை திண்மக் கழிவகற்றல் மேற்கொண்ட வேளையில் இவை கண்டெடுக்கப்பட்டது. இதனை திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்பாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை அவ்வீதியினால் மனிபேஸ் தொலைந்து விட்டதாக தேடிவந்த உரிமையாளரிடம் அது தொடர்பான ஆவணங்களை உறுதிப்படுதியதன் பின்னர் பிரதேச சபையில் வைத்து உரிய ஆவணங்களும், 40,000 ரூபாய் பணமும் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் சம்மாந்துறை பிரதேச சபைக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்தமைக்காக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் குறித்த ஊழியர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன், இவ்ஊழியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்குமாறு சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களிடம் பணிப்புரை வழங்கினார்.
இவ்வாறான பணம், நகை, பெறுமதியான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :