இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் சிரேஷ்ட பிரதி தலைவர் வைத்தியர் A. உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் Dr. Y.S.M. ஸியா, மூதூர் பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் முன்னால் உறுப்பினர்களான J.M. சுக்ரி, S.T. ஜஹ்பர், திருகோணமலை மாவட்ட தேசிய காங்கிரஸின் பொருளாளர் S. நபீர் (பாவா ஏஜென்சி) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைக்கு கிடைத்த ஆசனத்தை வருடம் ஒருவருக்கு என்ற கௌரவ தலைவர் அல் ஹாஜ் A.L.M. அதாஉல்லா அவர்களின் வாக்குறுதிக்கு அமைய மூதூர் பிரதேச சபை உறுப்பினராக இருந்துவந்த தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த S.T. ஜௌபர் அவர்கள் அண்மையில் தனது பதவியை தாமாக முன்வந்து இராஜினாமா செய்திருந்தார்.
அந்த வெற்றிடத்தை நிரப்ப புதிய உறுப்பினராக Y.S.M. சிஹான் அவர்கள் மூதூர் பிரதேச சபைக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டு இன்று கிழக்கு வாசலில் வைத்து சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
0 comments :
Post a Comment