கோழிப் பண்ணையாளர்களின் நலன்கருதி ஆலோசனை, வழிகாட்டல்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடாக வழங்கப்படும்.



சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
ம்பாரை மாவாட்ட கரையோர பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தி தொடர்பில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு எதிர் காலத்தில் ஆலோசனை, வழிகாட்டல்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடாக வழங்கப்படும் என தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் சமூகங்களை தொடர்பு படுத்தும் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களின் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட கரையோர கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கான கைத்தொழில் ரீதியிலான செயலமர்வு முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக் அவர்களின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன்போது கோழிப் பண்ணை உரிமையாளர்களின் கருத்தினைத் தொடர்ந்து உரையாற்றும் போதே பீடாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழில்நுட்பவியல் பீடத்தினது உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவின் துறைத் தலைவர் கலாநிதி ஏ.என்.எம்.முபாறக் அவர்களின் வழிகாட்டலில் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் தங்களது உற்பத்தியில் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக உரிமையாளர்கள் தெரிவித்த கருத்தாவது, தற்போது நாட்டில் நிலவும் விலையேற்றத்திற்கு மத்தியில் கோழிப் பண்ணை உற்பத்தி- செய்வது கடினமான விடயமாகும். மொத்த வருமானத்தில் 80% கோழிக்கான தீனுக்கு செலவிடப்படுகின்றது அதனால் அத்தொழிலை விட்டுட்டு ஓடிவிடுவோமா என்று தோன்றுகின்றது என அம்பாரை மாவட்ட கரையோர கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் உரிமையாளர்கள் கூறுகையில், கோழித் தீனுக்கான மாற்று மூலப் பொருட்களான புரதம், சக்தி வளங்களின் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உள்ளுரில் மாற்று மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தல். தற்போது உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் புரத மூலப் பொருளான மீன் தீனின் தரத்தினை பரிசோதித்தலும் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளை கண்டறிதல். தற்போது சந்தையில் காணப்படுகின்ற கோழித்த தீன் வகைகளின் தரத்தினை கண்டறிவதற்கான ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்தல். விஷேடமாக இப்பிராந்தியத்திலுள்ள கோழிப் பண்ணையாளர்கள் அனைவரையும் இணைத்து ' கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் ஒன்றினை' உருவாக்கி இதனுடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரிச் சலுகைகளைப் பெற வேண்டும். கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தினுடாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் உள்ளுர் சந்தை விலையின் ஸ்திர தன்மைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.

மேலும், நாம் வெறுமனே கோழிக் குஞ்சுகளை மாத்திரம் உற்பத்தி செய்யாமல் இப்பிராந்தியத்தில் காணப்படுகின்ற வளங்களை பயன் படுத்துமுகமாக நாளந்தம் கடலுக்குள் வீசப்படுகின்ற சுமார் 500 தொடக்கம் 2000 கிலோ கிராம் மீன் கழிவுகள் மற்றும் சந்தைகளில் வீசப்படுகின்ற மீன் கழிவுகள் கருவாட்டு கழிவுகள் போன்றவைகளை சேகரித்து தீன் வகைகளையும் மேற்கொள்ள பொறிமுறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறான வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி இத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு தென்கிழக்கப் பல்கலைக்கழகம் ஊடாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாதகமாக அமையும் என நினைக்கின்றோம் எனவும் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இச்செயலமர்வில் இதன் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக், உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவின் துறைத் தலைவர் கலாநிதி ஏ.என்.எம். முபாறக், சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஜீ. நிஷாந்தன், எம்.ஜே.எம்.பாரி உட்பட அம்பாரை கரையோர பிரதேச கோழிப் பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :